கோவை: கோவையில் பூ பறித்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் நகை பறித்து கொண்டு ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் பூ பறித்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் நகை பறித்துக் கொண்டு ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள லட்சுமியாபுரதைச் சேர்ந்தவர் வெங்கடசாமி, இவரது மனைவி ருக்குமணி(72). அவர் நேற்று காலை தனது வீட்டு முன்பு நின்று பூப்பறித்துக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் சாமி கும்பிட எங்கள் வீட்டிற்கு செம்பருத்திப்பூ வேண்டுமென கேட்டார். இதில் மகிழ்ச்சி அடைந்த மூதாட்டி பூக்களை பறித்து அந்த வாலிபரிடம் கொடுத்தார். உடனே அந்த வாலிபர் பூக்களை நழுவ விடுவது போல பூக்களை கீழே போட்டார். அதை எடுக்க அந்த மூதாட்டி கீழே குனிந்தார்.
அப்போது பாட்டி கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இதுகுறித்து பாட்டி அலறவே, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து திருடர்களை விரட்டினர். அதற்குள்ளாக அவர்கள் பைக்கில் மின்னல் வேகத்தில் ஓடி மறைந்தனர்.
பின்னர், இதுகுறித்து மூதாட்டி சிங்காநல்லூர் போலீசில் புகார் தெரிவித்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.