கொரோனா தடுப்பூசி முகாமில் ஆளுங்கட்சியினர் தலையீடு இல்லை என்பதை முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும் - வானதி சீனிவாசன் எம்எல்ஏ

கோவை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முகாமில் ஆளுங்கட்சியினர் தலையீடு இல்லை என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும் என்று பொள்ளாச்சியில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.


கோவை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முகாமில் ஆளுங்கட்சியினர் தலையீடு இல்லை என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும் என்று பொள்ளாச்சியில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

பொள்ளாச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுக அரசு பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டத்தை உருவாக்க வேண்டும், தற்போது கொப்பரை தேங்காய் விலை குறைந்து வரும் சூழ்நிலையில் அண்டை மாநிலமான கேரளா மாநிலம் போன்று கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக கூடுதல் விலை கொடுத்து கேரளத்தில் தென்னை விவசாயிகளை பாதுகாக்கிறார்கள் என்றார்.

அதேபோல, மத்திய அரசின் குறைந்த பட்ச ஆதார விலையோடு தமிழக அரசு கூடுதல் விலையை தமிழக தென்னை விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார்.

மேலும், 2016 ஜூலை 11ம் தேதி அன்று மு.க. ஸ்டாலின் கொடுத்த அறிக்கையின் படி சத்துணவு திட்டத்துக்கும் ரேஷன் கடைகளிலும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணையை பயன்படுத்த வேண்டும் என்று முதலமைச்சராக பதவியேற்று இருக்கக்கூடிய மு.க.ஸ்டாலின் செய்ய வேண்டும் என்றும், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட கூடிய இடங்களில் அதிகாலையிலிருந்து மக்கள் காத்துக் கொண்டிருந்தாலும் கூட ஆளுகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நிர்வாகிகள் டோக்கன்களை கைப்பற்றிக் கொண்டும், சில இடங்களில் அவற்றுக்காக பணத்தையும் பெற்று கொள்ளும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது.

எனவே, உடனடியாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இதில் கவனம் செலுத்தி எந்த காரணம் கொண்டும் மத்திய அரசாங்கம் இலவசமாக வழங்கப்படும் தடுப்பூசியை எந்தவித அரசியல் கட்சியினரின் குறுக்கீடு இல்லாமல் அது மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அதேபோல, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தமிழக மக்களின் துன்பத்தை குறைக்க வேண்டுமென்றால் ஒரிசா போன்ற மாநிலங்களில் வரியை குறைத்தது போல் தமிழகத்திலும் வரியை குறைக்க வேண்டும், தேர்தலில் வாக்குறுதி கொடுத்தை நிறைவேற்ற வேண்டும், மத்திய அமைச்சரவை விரிவாக்கம் அது முழுக்க முழுக்க பிரதமர் எடுக்கப்பட்ட கூடிய முடிவு, அதனால் இதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் வந்தால் நாங்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைவோம் என்று வானதி சினிவாசன் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...