கோவை: மருத்துவமனை நிர்வாகம் 10 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் காளப்பகுதியைச் சேர்ந்த 75 வயதான ராமாத்தாள் பாட்டி தனது மூன்று தலைமுறை வாரிசுகளுடன் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

தனது குடும்பத்திற்கு சொந்தமான 1.5 ஏக்கர் பாரம்பரிய சொத்துகளை KMCH மருத்துவமனை நிர்வாகம் ஆக்கிரமித்து இருப்பதாகவும், அரசு அதிகாரிகள் உதவியுடன் போலி ஆவணங்களை தயாரித்து நிலத்தை ஆக்கிரமித்து இருப்பதாகவும் கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

இதுகுறித்து பேசிய ராமாத்தாள் பாட்டியின் பேரன் கார்த்திக், “kmch மருத்துவமனை நிர்வாகம் இதேபோன்று பல இடங்களை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது. இது குறித்து ஏற்கெனவே புகார் அளிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த முறைகேடுகளை தனிநபர் நீதிபதி நியமித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு இடத்தை மீட்டு கொடுக்க வேண்டும்'' என கூறினார்.