வால்பாறையில் நவீன இயந்திரங்கள் மூலம் தேயிலை பறிக்கும் பணி நடைபெற்று வருகிறது..!

கோவை: வால்பாறையில் தேயிலைச் செடிகளில் கொழுந்து அதிகரித்துள்ளதால் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் கொழுந்து பறிக்கும் பணியில் நவீன இயந்திரங்களை புகுத்தி, தேயிலை பறிக்கும் பணி நடைபெற்று வருகிறது.


கோவை: வால்பாறையில் தேயிலைச் செடிகளில் கொழுந்து அதிகரித்துள்ளதால் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் கொழுந்து பறிக்கும் பணியில் நவீன இயந்திரங்களை புகுத்தி, தேயிலை பறிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையில் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இந்த தேயிலைத் தோட்டங்களில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். கடந்த ஒரு மாத காலமாக வால்பாறை பகுதியில் மழையும் வெய்யிலும் மாறி மாறிய சீதோசன நிலை நிலவியதால் தேயிலைத் தோட்டங்களில் தேயிலைக் கொழுந்து அதிகரித்துள்ளது.

தேயிலைக் கொழுந்து பறிக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தேயிலைத்தூள் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. தேயிலைச் செடிகளில் கொழுந்து அதிகரித்துள்ளதால் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் கொழுந்து பறிக்கும் பணியில் நவீன இயந்திரங்களை புகுத்தி உள்ளது. 30 தொழிலாளர்கள் செய்யக்கூடிய பணியை ஐந்து தொழிலாளர்கள் செய்து முடிப்பதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக பெரும்பாலான தேயிலைத் தோட்டங்களில் நவீன இயந்திரங்களைக் கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபடுத்த தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...