கோவை: கோவை மாநகராட்சியில் வீடு வீடாகச் சென்று இணை நோய்ப் பரிசோதனை மற்றும் தடுப்பூசிகள் விடுபட்டோர் விவரம் குறித்த நடவடிக்கைகள் எடுத்து வருவது பற்றி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் உள்ள 100 வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று இணை நோய்களான இரத்த அழுத்தம், சாக்கரை நோய், இதய நோய், சுவாச கோளாறு, புற்று நோய் மற்றும் இதர நோய்கள் பாதிப்பு உள்ளவர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இவ்விவரங்கள் அனைத்தும் இதற்கான பிரத்யோக கைப்பேசி செயலி மூலம் டிஜிட்டல் முறையில் சேகரித்து வருகின்றனர். அதன்படி இதுவரை 1,13,925 நபர்களின் விவரங்கள் சேகரிக்கபபட்டுள்ளன.
இதில் ஆண்கள் 54,126, பெண்கள் 59,845 ஆவர். மேலும், இதில் சாக்கரை நோய் பாதித்தவர்கள் 42,459 நபர்கள், இரத்த அழுத்தம் உடையவர்கள் 34,090 நபர்கள்,
சாக்கரை மற்றும் இரத்த அழுத்தம் உடையவர்கள் 19,655 நபர்கள், இருதய நோய் உள்ளவர்கள் 5,289 நபர்கள், நுரையீரல் நோய் சம்பந்தபபட்டவாகள் 1,627, புற்று நோய் உள்ளவர்கள் 298 மற்றும் இதர இணை நோய் உள்ள நபர்கள் 21,315 ஆகும்.
இவர்களில் தனியார் மருத்துவமனைகளில் 77,700 நபர்களும், அரசு மருத்துவமனையில் 22,411 நபர்களும், ESI மருத்துவமனைகளில் 3,932 நபர்களும் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 8,296 நபர்களும் சிகிச்சை பெற்றுள்ளனர். கொரோனா தடுப்பூசியானது 41,738 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது, மேலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத, விடுபட்ட நபர்களுக்கு தனியாக தடுப்பூசி செலுத்தும் பொருட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்கள்.