கோவை: கேரளாவில் இருந்து மது வாங்க தமிழகம் வரும் குடிமகன்களால் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பெருந்தொற்று பரவும் அபாயம் உள்ளதாக கோவை பொதுமக்கள் வேதனையடைகின்றனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று காரணத்தால் கடந்த இரண்டு மாதங்களாக தளர்வுகள் இல்லாத மாவட்டமாக இருந்தது. தற்போது கொரோனா பெருந்தொற்று குறைந்துள்ள சூழலில், கோவை மாவட்டத்தில் மது கடைகள், நகை கடைகள் உள்ளிட்டவற்றை திறக்க கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு வழங்கியது. கோவை மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ளது.
தற்போது கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்துள்ளதால் தளர்வுகளை நீக்கி கடும் கட்டுப்பாட்டை அம்மாநில மக்களுக்கு கேரள அரசு விதித்துள்ளது.

இதனால், பாலக்காடு மாவட்டத்தில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ள சூழலில், மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ள தமிகத்தின் கோவை மாவட்டத்தில் கேரள மாநில குடிமகன்கள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளனர். இதனால் கொரோனா கட்டுப்பாட்டில் இருந்து மீண்டு வரும் கோவை மாவட்டம் மீண்டும் நோய் பரவலுக்கு ஆளாகும் சூழல் உருவாகி உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தமிழக கேரள எல்லை பகுதியான பொள்ளாச்சி, பாலக்காடு இடையே சுமார் ஆறு வழித்தடங்கள் உள்ளது. எனவே, கேரளாவில் இருந்து மது வாங்க வருபவர்கள் சுலபமாக தமிழகத்திற்குள் நுழைந்து மதுவை வாங்கிச் செல்கின்றனர். இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும். எனவே, இதை கருத்தில் கொண்டு தமிழக கேரள மாநிலங்களை இணைக்கும் இந்த ஆறு வழி தடத்திலும் பாதுகாப்பை பலப்படுத்தி சோதனையின் அடிப்படையில் அங்கிருந்து வரும் வாகனங்களை அனுப்பினால் நோய் பரவும் நிலையை தடுக்கலாம் என்று பொதுமக்கள் கோரிக்கை விடு்த்துள்ளனர்.