சாலையில் நடந்து சென்ற 2 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: குடி போதை ஆசாமிகள் வெறிச்செயல்..!

கோவை: கோவை அருகே சாலையில் நடந்து சென்ற இரண்டு வாலிபர்களை குடிபோதையில் வம்புக்கிழுத்து ஏன் நடந்து செல்கிறாய் என கேட்டு, சரமாரியாக அரிவாளால் வெட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவை அருகே சாலையில் நடந்து சென்ற இரண்டு வாலிபர்களை குடிபோதையில் வம்புக்கிழுத்து ஏன் நடந்து செல்கிறாய் என கேட்டு, சரமாரியாக அரிவாளால் வெட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை ஆலந்துறை அடுத்த வெள்ளிமலை பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் தன்னாசி மகன் கருப்பசாமி (27). கூலி வேலை செய்து வருகிறார். இவர் வீட்டின் அருகே நடந்து சென்றதாகத் தெரிகிறது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கிட்டுச்சாமி என்பவர் எதற்காக அடிக்கடி நடந்து செல்கிறாய் என கருப்பசாமியிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எற்பட்டு கைகலப்பாகி உள்ளது. இதையடுத்து இரவு கிட்டுசாமியின் மகன் உதயகுமார் கருப்புசாமியின் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரது தாயாரை தாக்கியுள்ளார்.

பின்னர் அங்கிருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் இரவு மீண்டும் கருப்பசாமி மற்றும் அவரது உறவினர் சுஜித்குமார் இரண்டு பேரும் வீட்டின் அருகே நடந்து சென்றதாகத் தெரிகிறது. அப்போது சாலை அருகே இருந்த உதயகுமார், மற்றும் அவரது நண்பர்கள் திடீரென கருப்புசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தாக்கியுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த உதயகுமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கருப்புசாமியை வெட்டியுள்ளார். மேலும் சூர்யா என்பவர் சுஜித்குமாரை கத்தியால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த இருவரும் அங்கேயே மயங்கி விழுந்தனர்.

இதனால் உதயகுமார் உள்ளிட்ட 5 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக கருப்புசாமியின் தந்தை தன்னாசி கொடுத்த புகார் அடிப்படையில் ஆலந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து கிட்டுசாமி, சூர்யா, உதயகுமார், அய்யாசாமி, பிரசாத் ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...