கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதி-3 திமுக பொறுப்பாளர் ஷேக் அப்துல்லா, போத்தனூர் போலீஸில் ஒரு புகார் மனு அளித்தநிலையில், முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பிய அதிமுக நிர்வாகி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

கோவை சிங்காநல்லூர் பகுதி-3 திமுக பொறுப்பாளராக இருப்பவர் ஷேக் அப்துல்லா. இவர் போத்தனூர் போலீஸில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது- 'கோவை கரும்புக்கடை ஆசாத் நகரைச் சேர்ந்தவர் பக்ருதீன் என்ற திண்டுக்கல் பதூர் அதிமுக நிர்வாகி இவர் தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் ஒரு வீடியோவை பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். இதுகுறித்து போத்தனூர் போலீஸார் அதிமுக நிர்வாகி மீது அவதூறு பரப்பும் வகையில் பேசுதல் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.