கோவை அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் கொரோனா படுக்கைகள்... 3-வது அலை அடித்தால் சந்திக்க சுகாதாரத்துறை தீவிரம்..!

கோவை: கோவை அரசு ஆஸ்பத்திரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 80 படுக்கைகள் கொண்ட சிறப்பு வசதிகளுடன் கூடிய ஆக்சிஜன் இணைப்பு கொண்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. மூன்றாவது அலை ஏற்பட்டால் அதை ஆரம்பத்திலேயே தடுக்க சுகாதாரத் துறை தீவிரம் காட்டி வருகிறது.


கோவை: கோவை அரசு ஆஸ்பத்திரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 80 படுக்கைகள் கொண்ட சிறப்பு வசதிகளுடன் கூடிய ஆக்சிஜன் இணைப்பு கொண்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. மூன்றாவது அலை ஏற்பட்டால் அதை ஆரம்பத்திலேயே தடுக்க சுகாதாரத் துறை தீவிரம் காட்டி வருகிறது.

கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள கோவை அரசு மருத்துவமனைகளில் 800 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை தமிழ் நாட்டில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி தற்போது குறைந்து வருகிறது. இரண்டாவது அலையின் தீவிரத்தால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கான ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது. பெரும்பாலான நோயாளிகளுக்கு ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் பெரும் சிரமத்துக்குள்ளாகினா். உரிய நேரத்தில் ஆக்சிஜன் கிடைக்காததால் ஒரு சில இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

இந்தநிலையில், கொரோனா மூன்றாவது அலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், குறிப்பாக சிறுவா்கள், குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவ வல்லுநா்கள் தெரிவித்து வருகின்றனா். இதனால் அனைத்து மாவட்டங்களிலும் மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கோவையில் அனைத்து அரசு மருத்துமனைகளிலும் ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிப்பு, குழந்தைகளுக்கு தேவையான மருந்துகள் கொள்முதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...