கோவை: கோவை அருகே காண்டிராக்டர் கொலை. சம்பள பிரச்சனையால் ஏற்பட்ட விபரீதம். தப்பி ஓடிய இரண்டு பேரையும் பிடிக்க போலீஸ் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

கோவை சூலூர் அருகே உள்ள காடம்பாடி மணியக்காரன் தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் உப்பிலி பாளையத்தைச் சேர்ந்த ரவி பிரசாத் வயது 42, என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்கியிருந்தார். மேலும், அந்தப் பகுதியில் பெயின்டிங் கான்ட்ராக்ட் வேலை எடுத்து செய்து வந்தார். இவர் கடந்த 8 நாட்களுக்கு முன்பு தன்னிடம் வேலை செய்யும் இரண்டு பேரை பழனி ஆண்டவர் கோயில் வீதியில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்க வைத்தார்.
நேற்று இந்த வீட்டில் ரவி பிரசாத் மற்றும் அவருடன் வேலை செய்யும் இரண்டு பேரும் சேர்ந்து மது குடித்தனர். அப்போது கூலி கொடுப்பது சம்பந்தமாக இவர்களுக்கு இடையே குடிபோதையில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரெண்டு பேரும் சேர்ந்து தூணுக்கு அடியில் வைக்கும் வட்ட வடிவ கல்லை எடுத்து ரவி பிரசாத்தின் தலையில் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
அந்த ரெண்டு பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்கள் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது ரவிபிரசாத் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பின்னர், இதுகுறித்து சூலூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.