கோவை: கோவையில், கொரோனா பெருந்தொற்று தளர்வுக்குப் பிறகு பொதுமக்கள் போலீஸ் நல்லுறவு மக்கள் சந்திப்பு சிறப்பு நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கோவை சரக டிஐஜி முத்துசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை திருப்பூர் நீலகிரி ஈரோடு மாவட்டத்தை உள்ளடக்கிய கோவை சரகத்தில் கொரோனா நோய் பரவல் பாதிப்பு அதிகமாக இருந்தது. நோய் பரவல் தற்போது குறைந்து ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து அனுமதி வழங்கப்பட்ட நிலையில் போலீஸார் கண்காணிப்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து கோவை சரக டிஐஜி முத்துசாமி கூறும்போது:-
‘‘கோவை சரகத்தில் போலீஸ் பாதுகாப்பு பணி கண்காணிப்பு சிறப்பாக இருக்கிறது. மாவட்ட மாநில எல்லைகளில் 24 மணிநேர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு குற்றங்கள் தடுக்கப்படுகிறது. மதுபானம் போதைப்பொருட்கள் கடத்தல் உணவுப் பொருட்கள் கடத்தல் வெகுவாக தடுக்கப்பட்டுள்ளது. நோய் பரவல் காலத்திலும் கோவை நீலகிரி திருப்பூர் மாவட்டத்தில் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மாவோயிஸ்ட் மற்றும் சமூகவிரோத கும்பல் நடமாட்டம் கண்டறிய சோதனை நடத்தப்பட்டது. அதிரடிப்படை போலீஸார் நக்சல் தடுப்பு பிரிவு போலீஸார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனோ நோய் பரவலால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு பொருளாதார உதவிகளை பல்வேறு பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டது. ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. பொதுமக்கள் போலீஸ் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் மக்கள் சந்திப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்களை போலீஸார் நல்ல முறையில் அணுக வேண்டும். கனிவாகப் பேசி குறைகளைத் தீர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களிடையே போலீஸாருக்கு நல்லுறவு இருந்தால் குற்றங்கள் வெகுவாக குறையும்'' என்று டிஐஜி முத்துசாமி கூறினார்.