கோவை: கடந்த கிட்டதட்ட ஐந்து ஆண்டுகளாக மாநகராட்சி இயற்றும் தீர்மானங்கள் மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யபடாமல் நிலுவையில் இருந்தது. இதை தொடர்ந்து பல புகார் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கபடவில்லை.
கோவை: கடந்த கிட்டதட்ட ஐந்து ஆண்டுகளாக மாநகராட்சி இயற்றும் தீர்மானங்கள் மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யபடாமல் நிலுவையில் இருந்தது. இதை தொடர்ந்து பல புகார் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கபடவில்லை.
ஆனால் கோவை மாநகரில் புதிதாக பதவியேற்றுள்ள மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா, இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து 2019 வரையிலான தீர்மானங்களை இணையதளத்தில் பதிவேற்றியுள்ளார்.
கோவை மாநகராட்சியில் கடந்த 11-11-2016 முதல் 24-6-2019 வரை முன்னாள் தனி அலுவலர் / ஆணையர்களால் இயற்றப்பட்டுள்ள மொத்தம் 1485 தீர்மானங்கள், எஸ்.பி.தியாகராஜன் என்பவரின் முறையீட்டு மனுவைத் தொடர்ந்து, மக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில், எஸ்.பி.தியாகராஜன் என்பவரின் முறையீட்டு மனுவைத் தொடர்ந்து, கடந்த 11-11-2016 முதல் 24-6-2019 வரை முன்னாள் தனி அலுவலர் / ஆணையர்களால் இயற்றப்பட்டுள்ள மொத்தம் 1485 தீர்மானங்களை தற்போது பொதுமக்கள் பார்வையிட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கீழே கண்டுள்ள 30-6-2021 தேதியின் 5 தீர்மானங்களில் பொருள் எண் 5-ன் படி 5 மண்டலங்களில் ரத்து செய்யப்பட்டுள்ள 396 டெண்டர்களின் விவரங்கள்...
கடந்த 19-7-2017 முதல் 30-5-21 முடிய தனி அலுவலர் / முன்னால் ஆணையர்களால் இயற்றப்பட்டுள்ள தீர்மானங்களை கோவை மாநகராட்சி இனையதளத்தில் கடந்த 4 வருடங்களாக பதிவேற்றம் செய்யப்படவில்லை. (14-6-21) அதன் பிறகு கடந்த மாதம் புதிய ஆணையர் அவர்கள் பதவி ஏற்றவுடன் 4 வருடங்களாக பதிவேற்றம் செய்யப்படாத கடந்த 19 -7 -17 முதல் வரை 24-6-19 வரை 30 கூட்டங்களில் நிறைவேற்றப்பட்டுள்ள 786 தீர்மானங்களை கடந்த 13-6-21 முதல் நேற்று வரை பதிவேற்றம் செய்துள்ளனர்.
மேலும், கடந்த மாதம் 30-6-21 அன்று தனி அலுவலர் / தற்போதைய ஆணையர் அவர்களால் 5 தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளதில் 98. 19 கோடி ரூபாய் டெண்டர்களை ரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி மாமன்ற கூட்ட தீர்மானங்களை கூட்டம் முடிந்த 24 மணி நேரத்தில் 30-6-21 என குறிப்பிட்டு 5 தீர்மானங்களையும் மேலும் 5 மண்டலங்கள் தொடர்பான 396 டெண்டர்களை ரத்து செய்யப்பட்டுள்ள விவரங்களையும் 24 மணி நேரத்தில் மாநகராட்சி இணையத்தில் பதிவேற்றம் செய்திட தக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.