வால்பாறை: கடந்த அதிமுக ஆட்சியில், கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட படகு இல்லம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே சாக்கடை போல் காட்சியளிக்கிறது என்று பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வால்பாறை, ஸ்டேன்மோர் அருகே அமைக்கப்பட்டுள்ள படகு இல்லத்திற்கு, நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுத்தகரிக்கப்படாத கழிவு நீர் வந்து சேர்வதால், அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பேசிய அவர்கள், வால்பாறையில் உள்ள காமராஜ் நகர், காந்தி நகர், புது மார்க்கெட், கக்கன் காலனி, சிறுவர் பூங்கா ஆகிய பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், குப்பைகள், படகு இல்லத்தில் வந்து சேர்கிறது. குறிப்பாக, காமராஜ் நகர் வழியாக வரும் ஆற்றை மறித்து இந்த படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளதால், இதன் காரணமாக ஆற்றில் வரும் கழிவுநீர் குப்பைகள் அனைத்தும் படகு இல்லத்தில் சேருகிறது. மேலும், படகு இல்லம் அமைப்பதற்காக ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளதால், சிறுவர் பூங்கா வரை கழிவு நீர் தேங்கி நிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது என்றும் இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
பிற பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் படகு இல்லத்தில் கலக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிடாமல், சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி அவசரகதியில் படகு நிலையத்தை நிறுவியது தான், இந்த நிலைக்கு முக்கிய காரணம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
எனவே, படகு இல்லத்தில் தேக்கியுள்ள கழிவுநீரை உடனடியாக வெளியேற்றி, படகு இல்ல பகுதிக்கு கழிவுநீர் வராதவாறு மாற்று வழியை ஏற்படுத்துமாறு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செயல்பாட்டிற்கு வரும் முன்னரே இந்த நிலை என்றால், எவ்வாறு வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இந்த படகு நிலையத்திற்கு வந்து படகு சவாரி செய்வார்கள் என்ற கேள்வியை எழுப்புகின்றனர் வால்பாறை பொதுமக்கள்.