கோவையில் ஒரே நாளில் ரூ.13.78 கோடிக்கு மது விற்பனை..!

கோவை: கோவையில் இரண்டு மாத இடைவெளிக்கு பின் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ 13.78 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: கோவையில் இரண்டு மாத இடைவெளிக்கு பின் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.13.78 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று 2 வது அலை காரணமாக, கடந்த மே மாதம் முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் சில வாரங்களுக்கு முன்னர் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, தற்போது தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி கோவை மாவட்டத்தின் வடக்கு மண்டலத்தில் உள்ள 158 கடைகளும், தெற்கு மண்டலத்தில் உள்ள 135 கடைகளும் என மொத்தம் 293 டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவை மாவட்டத்தில் உள்ள 293 டாஸ்மாக் கடைகளிலும் சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ. 7 கோடி வரை மதுபாட்டில்கள் விற்பனையாகும். ஆனால், கோவை மாவட்டத்தில் 55 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், நேற்று ஒரே நாளில் கோவை வடக்கில் 158 கடைகளில் ரூ.7 கோடியே 25 லட்சத்துக்கும், கோவை தெற்கில் 135 மதுக்கடைகள் மூலம் ரூ.6 கோடியே 53 லட்சத்துக்கும் என மொத்தம் ரூ.13.75 கோடிக்கு மது பாட்டில்கள் விற்பனையானது'' என்றார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...