களைகட்டியது பொள்ளாச்சி மாட்டு சந்தை; இரண்டு ஆண்டுகளுக்கு பின் திறப்பு

பொள்ளாச்சி: இரண்டு ஆண்டுகளுளாக மூடப்பட்டு இருந்த பொள்ளாச்சி மாட்டு சநதை இன்று திறக்கப்பட்டது. 1000க்கும் மேற்ப்பட்ட மாடுகள் விற்பனைககு குவிந்ததால் வியாபாரம்களைகட்டியது.


பொள்ளாச்சி: இரண்டு ஆண்டுகளுளாக மூடப்பட்டு இருந்த பொள்ளாச்சி மாட்டு சநதை இன்று திறக்கப்பட்டது. 1000க்கும் மேற்ப்பட்ட மாடுகள் விற்பனைககு குவிந்ததால் வியாபாரம்களைகட்டியது.

தென்தமிழகத்தில் பாரம்பரியம் மற்றும் புகழ்பெற்ற சந்தையாக பொள்ளாச்சிமாட்டுச்சந்தை விளங்கி வருகிறது. செவ்வாய் மற்றும் வியாழன் என இரண்டு தினங்களில் அங்கு நடைபெறும் மாட்டுச்சந்தையில், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிமாவட்டங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு வருவது வழக்கம். இதனால் பல கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வந்தது.

நகராட்சிக்கு சொந்தமான 3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மாட்டுச்சந்ததையின் ஒரு பகுதியில் சுத்தகரிப்பு நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்ததாலும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகவும், இரண்டு ஆண்டுகளாக பொள்ளாச்சி மாடுச்சந்தை செய்ல்பாடமல் இருந்தது.

இதனால் மாட்டு சந்தையை நம்பி இருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். தற்போது, கொரோனா தொற்று குறைந்துள்ளதால் மீண்டும் சந்தையை செயல்பட அனுமதி வேண்டும் என்று பொள்ளாச்சியை சேர்ந்த வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.



அவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்த பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம், இன்று முதல் மாட்டுச்சந்தை செயல்பட அனுமதி அளித்தது.



அதன்படி, இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின், பொள்ளாச்சி மாட்டுச்சந்தை களைகட்டியது. இன்று கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், அதேபோல் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர், ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனையானது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பொலிவுடன் மாட்டுச்சந்தை திறக்கப்பட்டுள்ளதால், மாட்டுச்சந்தை வியாபாரிகளும் தொழிலாளர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...