கோவை: பொள்ளாச்சி அருகே மது குடிக்க பணம் தர மறுத்த அண்ணனை ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்த தம்பியை போலீஸார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள பத்ரகாளியம்மன் கோயில் வீதி, நேரு நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(36). பெயிண்டர் ஆக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி ஐந்து குழந்தைகள் உள்ளனர். இவரது தம்பி கிருஷ்ணமூர்த்தி(34). இவரது அண்ணனுடன் சேர்ந்து பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் கிருஷ்ணமூர்த்தி இன்று அதிகாலை பணிக்குச் செல்லும் முன் மது அருந்த வேண்டும் என்று தனது அண்ணனிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது ஆறுமுகம் மது குடிக்க பணம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி அருகில் இருந்த கத்தியால் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகத்தை அருகில் இருந்த உறவினர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் முன்னரே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீஸார், உயிரிழந்த ஆறுமுகத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பின்னர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.