திருப்பூர்: திருப்பூர் அருகே பட்டா மாற்றித் தருவதற்காக பத்தாயிரம் ஆயிரம் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக துணை வட்டாட்சியரை திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள கேத்தனூரைச் சேர்ந்தவர் ராஜாமணி(52), விவசாயி. தனது இடத்திற்கு பட்டா மாறுதல் செய்ய பல்லடம் தாலுகா அலுவலகத்தை அணுகியிருக்கிறார். ராஜாமணியிடம் மண்டல துணை தாசில்தார் மேகநாதன்(48) என்பவர், பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். உடனே, திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் ராஜாமணி புகார் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி தலைமையிலான போலீஸார் நேற்று ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். ஏற்கெனவே தாலுகா அலுவலகத்தில் காத்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், ராஜாமணி பணத்தை கொடுக்கும் போது கையும் களவுமாக பிடித்தனர். அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதனால் இந்த அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.