திருப்பூர்: பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் சிஐடியு மோட்டார் வாகன தொழிற்சங்கத்தினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள வாடகை மற்றும் சொந்த வாகன ஓட்டுநர்களுக்கு மேலும் ஒரு பேரிடியாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு அமைந்திருப்பதாகவும் இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மோட்டார் வாகனத் திருத்த சட்ட மசோதாவை கைவிட வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் தனியார் மயமாக்கல் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக சிஐடியு மோட்டார் வாகன தொழிற்சங்கத்தினர் ஆட்டோ மற்றும் காரில் கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.