கோவை: கோவை மருதமலை முருகன் கோயில் அடிவாரத்தில் உள்ள மலைப்பகுதியில் காட்டுப்பன்றிகளை வேட்டையாடிய நான்கு பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வடவள்ளி மருதமலை அடிவாரத்தில், காட்டு பன்றியை வேட்டையாடிய நால்வரை, வனத்துறையினர் சிறையில் அடைத்தனர். கோவை வனச்சரக வனப்பகுதியை ஒட்டியுள்ள, மருதமலை, ஐ.ஓ.பி. காலனி, மீனாட்சி நகரில், நேற்று முன்தினம் இரவு காரில் வந்த, 4 பேர், சாலையில் சுற்றிய காட்டு பன்றியை நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். அங்கிருந்து தப்ப முயன்ற நால்வரையும், அருகில் இருந்த பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், காட்டுப்பன்றி வேட்டையாடியவர்கள் வடவள்ளி, முல்லை நகரை சேர்ந்த ராஜ்குமார்(43), சின்ன தடாகத்தை சேர்ந்த சசிகுமார்(47), பன்னிமடையைச் சேர்ந்த சம்பத்குமார், 39), நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த தேவராஜ்(55) என்பது தெரியவந்தது. இவர்களிடமிருந்து, வேட்டையாட பயன்படுத்திய நாட்டு துப்பாக்கி, கார் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷின் உத்தரவின் பெயரில், நால்வர் மீதும் வழக்கு பதிவு செய்து, போலீஸார் சிறையில் அடைத்தனர்.