கொரானா அச்சம் காரணமாக பொள்ளாச்சியில் வெறிச்சோடிய பேருந்துகள்.

கொரானா அச்சம் காரணமாக பொள்ளாச்சியில் வெறிச்சோடிய பேருந்துகள். பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.


கோவை:கொரானா அச்சம் காரணமாக பொள்ளாச்சியில் வெறிச்சோடிய பேருந்துகள். பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே மற்றும் நகர் பகுதிகளில் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 50 சதவிகித பயணிகளுடன் பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து கிராமப்புறங்கள் மற்றும்நகர்ப்பகுதியில் செல்லும் பேருந்துகள் 50 சதவிகித பயணிகளுடன் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது நோய்த் தொற்று அச்சம் உள்ளதால் பொதுமக்கள் பொது பேருந்தை போக்குவரத்தை பயன்படுத்த அச்சம் காட்டி வருகின்றனர். எப்போதும் கூட்டநெரிசலோடு காணப்படும் மத்திய பேருந்து நிலையங்கள் கொரானா காரணமாக பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இதனால் பயணிகள் இன்றி நகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பேருந்துகள் வலம் வருகின்றன. அரசு போக்குவரத்து நிர்வாகம் உரிய நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கிருமி நாசினி தெளித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி பேருந்துகளை இயக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...