கோவை: தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை, TamilNadu Tourism Development Corporation மூலம் விரைவில் கோவை மாநகரில் புதிய படகு இல்லம் (Boathouse) செயல்படுத்த மாவட்ட சுற்றுலா அலுவலர்(District Tourism officer) T.அரவிந்தகுமார் ஆய்வு மேற்கொண்டார்.

‘ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் கோவையில் உள்ள பெரியகுளம் மற்றும் வாலாங்குலம் பகுதிகளில் I Love Kovai, என்ற ‘செல்பி' கார்னர், இரவில் மிளிரும் வகையில் வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
நடைபாதை, நடைப்பயிற்சிக்கான வழி, சைக்கிள் பாதை, குழந்தைகள் விளையாடுவதற்கான இடம், திறந்தவெளி அரங்கம், ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கான தனியிடம், உணவகம் என பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
நேற்று முதல் அனைத்து SmartCity திட்டங்களும் கோவையில், அப்போதைய மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் மூலம் திறக்கப்பட்டன. எனவே, அங்கே படகு இல்லம் செயல்படுத்த ஆய்வு நடைபெற்றுள்ளது.

விரைவில் படகு இல்லம் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மூலம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்தகுமார் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகள் இமயவரம்பன், வெங்கடேசன், உதயசங்கர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.