கோவை: கோவை அருகே எண்ணெய் ஆலையில் வேலை பார்த்தபோது, இயந்திரத்தில் சிக்கி கை துண்டாகியதில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மதுக்கரை அருகே எண்ணெய் தயாரிக்கும் ஆலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மூதாட்டியின் கை இயந்திரத்தில் சிக்கி துண்டாகி மூதாட்டி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- ‘‘கோவை மதுக்கரை அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி இவரது மனைவி காளியம்மாள் வயது 60, அதே பகுதியில் கடந்த இரண்டு வருடமாக செக்கு எண்ணெய் ஆலை வைத்து நடத்தி வருகிறார். நேற்று காளியம்மாள் வழக்கம்போல ஆலையில் செக்கு எண்ணெய் ஆட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவரது வலது கை செக்கு எண்ணெய் ஆட்டும் இயந்திரத்தில் மாட்டிக்கொண்டது. இதில் அவரது கை துண்டானது இதனால் அவர் வலியால் அலறித் துடித்தார். அவரின் சத்தத்தைக் கேட்டு அவரது மகன் முத்துக்குமார் அங்கு ஓடி வந்தார். அப்போது அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அவர்களை மீட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மதுக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.