கோவை: கோவை அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை அகற்றிய போது மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோவை அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை அகற்றிய போது மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது:- ‘‘கோவை சூலூர் அடுத்த செஞ்சேரிமலை செங்காட்டு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி வயது 61. விவசாயி, இவரது மனைவி நாகம்மாள்(50), இவரது மகன் கருப்பசாமி(20), இவர் அந்தப் பகுதியில் உள்ள வாழைத் தோட்டத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில், நேற்று வழக்கம் போல பெரியசாமி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு கீழே அறுந்து கிடந்த மின்கம்பியை கையால் எடுத்து அகற்றினார். எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்தநிலையில் தோட்ட உரிமையாளர்கள் வந்து பார்த்தபோது, பெரியசாமி மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தது தெரியவந்தது.
பின்னர், இதுகுறித்து அவர் சுல்தான்பேட்டை போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பெரியசாமியின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீஸார் 176 சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.