படித்த இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து தொழில் முனைவராக உருவாக்க வேண்டும். ஆலோசனை கூட்டத்தில் சற்று முன்பு மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவு..!

கோவை: படித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கிட செயல்படுத்தப்படும் சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.


கோவை: படித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கிட செயல்படுத்தப்படும் சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கு பெரிதும் உதவும் வகையில் குறைந்த முதலீட்டில் தொழில் முனைவோர்களை உருவாக்குவதிலும், அதிக அளவில் வேலைவாய்ப்புகளை பெருக்குவதிலும், வேளாண் துறைக்கு அடுத்தப்படியாக விளங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் நலனுக்காகவும் மேம்பாட்டிற்காகவும் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்கள் குறித்தும் விவாதிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், கொரோனா பெருந்தொற்றினால் பாதிப்பிற்குள்ளாகியுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் இந்த நிதியாண்டில் வரவு, செலவு திட்ட முதலீட்டு மானிய ஒதுக்கீட்டில் 60 விழுக்காடான ரூ.168 கோடி, 1975 தொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக விடுவிக்கப்பட்ட விவரங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவாலான முறை சார்ந்த கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், படித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்க செயல்படுத்தப்படும் சுய வேலைவாய்ப்பு திட்டங்களுக்கு 2021-2022ம் நிதி ஆண்டில் முன்னுரிமை அளித்து நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை தவறாமல் எய்திட வேண்டும் எனவும் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

சுயவேலைவாய்ப்பு திட்டங்களில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் மகளிர் ஆகிய பயனாளிகள் விகிதாசார பிரதிநிதித்துவம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். தமிழ்நாட்டை, இந்தியாவின் மிகவும் துடிப்பான புத்தாக்கத்திற்கு உகந்த மாநிலமாக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஏற்றுமதியை மேம்படுத்தவும், இறக்குமதி தொழிலுக்கு தேவையான உதவிகளையும் செய்ய ஏதுவாக சிறப்புத் திட்டங்களை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை உருவாக்கப்பட வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.

மேலும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், விண்வெளி வானூர்திகள், ரோபோடிக்ஸ் மற்றும் துல்லியமான கருவிகள் உற்பத்தி ஆகிய உயர் தொழில்நுட்பத் துறைகளில் ஈடுபட ஏதுவாக திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். தமிழ்நாடு முழுவதும் ஒரே சீரான தொழில் வளர்ச்சியை உருவாக்கிட ஏதுவாக, தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய பகுதிகளில் புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்கி, தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும், வேளாண் உற்பத்தி சார்ந்த தொழில் முனைவோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் செயலாளர் கிருஷணன், துறை சார்ந்த உயரதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...