திருப்பூர்: பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வந்து கொண்டிருந்த சூழ்நிலையில், திருப்பூர் மாவட்டத்திலும் பெட்ரோல் 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமையல் எரிவாயு விலையும் உயர்ந்து தற்போது 850 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலிண்டருக்கு மாலை அணிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.