கோவை: ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு பொதுப்போக்குவரத்து இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கோவை கோட்டத்தில் இருந்து 1472 அரசு பேருந்துகள் கோவை அரசு போக்குவரத்து கழகம் சார்பாக இயக்கப்பட்டது.

கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மே மாதம் முதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கம் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. பொதுப்போக்குவரத்து சேவைகள் மறுஅறிவிப்பு வரும் வரை நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இதனிடையே ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு பொதுப்போக்குவரத்து தொடங்க நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது. கோவை கோட்டத்தில் இருந்து 1472 பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதுகுறித்து கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி என கோவை கோட்டத்தில் இருந்து 1472 பேருந்துகள் இயக்கப்பட்டன. கோவை மாவட்டத்தில் மட்டும் 535 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் நகர பேருந்துகள் 338, மஃப்சல் பேருந்துகள் 197 இயக்கப்பட்டன. கோவையில் இருந்து மதுரை, திருச்சி, கரூர், சேலம் போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. அனைத்து பேருந்துகளிலும் 50 சதவிகித பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கொரோனா விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றப்பட்டன. பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்’’ என்றார்.