கோவை கடைத்தெருக்களில் மக்கள் கூட்டம்... அதிகாரிகள் அதிர்ச்சி..!

கோவை: கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் வீதி, 100 அடி சாலை, காந்திபுரம், டவுன்ஹால், உக்கடம் உள்ளிட்ட கடைத்தெரு பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.


கோவை: கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் வீதி, 100 அடி சாலை, காந்திபுரம், டவுன்ஹால், உக்கடம் உள்ளிட்ட கடைத்தெரு பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் கூடுதல் தளர்வுகள் ஒரே மாதிரியாக இன்று அமல்படுத்தப்பட்டது. இதனை அடுத்து கோவையில் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், பொது போக்குவரத்து மற்றும் அனைத்து வகையான கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்பட்டன.



இதனையடுத்து புது துணிகள் வாங்க, பொருட்கள் வாங்க என மக்கள் கூட்டம் கோவையில் உள்ள கடைத்தெருக்களில் அதிகரித்து காணப்பட்டது.

கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.



ஆனால், அதனையும் மீறி மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மக்கள் கூட்டம் அதிகரிப்பு மற்றும் கொரோனா விதிமுறைகள் கடைபிடிப்பு உள்ளிட்டவற்றை கண்காணிக்க மாநகராட்சி சார்பில் 20 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர வருவாய் துறை, காவல்துறை என பல்வேறு துறை அதிகாரிகள் தலைமையில் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.



மக்கள் கூட்டத்தைத் தவிர்க்கவும், கொரோனா விதிமுறைகளைக் கடைபிடிக்கவும் வாகனங்களில் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. அதையும் மீறி விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. இருப்பினும், மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அரசு துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோவை மாநகர் மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து ஜவுளிக்கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். ஒலிப்பெருக்கி மூலம் தொடர்ந்து இதுகுறித்த அறிவிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம். ஆனால், கடைத்தெருக்களில் மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இருப்பினும் மக்கள் முகக் கவசம் அணிகிறார்களா? சமூக இடைவெளியைப் பின்பற்றுகிறார்களா? என தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இதனை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது’’ என்றார்.

தேநீர் கடைகள், ஹோட்டல்களில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்களுடன் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தேநீர் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களை அனுமதித்தனர். மாநகராட்சி அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...