கோவையில் மூன்று இடங்களில் டிஜிட்டல் மழைமானி அமைக்க முடிவு..!

கோவை: கோவை மாவட்டத்தில் புதிதாக மூன்று இடங்களில் டிஜிட்டல் மழைமானி அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் புதிதாக மூன்று இடங்களில் டிஜிட்டல் மழைமானி அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை தெரிந்து கொள்வதற்காக மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் மழைமானி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக மூன்று இடங்களில் டிஜிட்டல் மழைமானி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, கோவையில் நில அதிர்வுகளை அறிந்து கொள்ளும் வகையில் சீஸ்மோகிராப் கருவி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள சீஸ்மோ கிராப் கருவியில் பதிவாகும் நில அதிர்வு குறித்த தகவல்களை கோவை நிர்வாகம் கேட்டுப் பெற வேண்டியது உள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தில் தற்போது அன்னூர், கோவை விமான நிலையம், வேளாண்மை பல்கலைக்கழக வளாகம், பெரியநாயக்கன்பாளையம், கோவை தெற்கு, மேட்டுப்பாளையம், ஆழியார், பொள்ளாச்சி, சூலூர், சின்னக்கல்லாறு, சின்கோனா, சோலையாறு, வால்பாறை பிஏபி, வால்பாறை தாலுகா ஆகிய இடங்களில் மழைமானி உள்ளது.

இதில் ஒரு சில இடங்களில் சார்பதிவாளர் அலுவலகத்தில் மழைமானி உள்ளது. இதனை தாசில்தார் அலுவலகத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக பேரூர், மதுக்கரை, ஆனைமலை ஆகிய இடங்களில் மழைமானி அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இங்கு டிஜிட்டல் மழைமானி அமைக்கப்பட உள்ளது. இது குறித்து சென்னை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது தவிர நிலநடுக்கம் குறித்து அறிந்து கொள்ள சீஸ்மோகிராப் கருவி கேட்டும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது’’ என்றார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...