கோவையில் தே.மு.தி.க சார்பில் பெட்ரோல் விலை ஏற்றத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..!

கோவை: கோவையில் தே.மு.தி.க சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் கட்டுமானப் பொருட்கள் விலை ஏற்றத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: கோவையில் தே.மு.தி.க சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் கட்டுமானப் பொருட்கள் விலை ஏற்றத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவையில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்று வந்தது. இந்தநிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உத்தரவுப்படி கோவை மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் காட்டன் செந்தில் தலைமையில் தேமுதிகவினர் கைகளில் கொடியை ஏந்தியபடி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தபால் நிலைய வாசலில் கூடினர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.



அப்பொழுது அவர்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கட்டுமான பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கண்டித்தும் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது மத்திய அரசே விலைவாசி உயர்வை தடுத்து நிறுத்து, பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்து சமையல் எரிவாயு விலை ஏறிப்போச்சு, விலைவாசி ஏற்றம் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் தாக்கம் மறுபக்கம், செத்து செத்துப் பிழைக்கிறனர் மக்கள், என தொடர்ந்து மத்திய மாநில அரசுகளை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர்.



இவை ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் தினகரன் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் சிவராமன், கோவை மாவட்ட அவைத்தலைவர் ரங்கராஜ் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் வனிதா, துரை உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...