கோவை: கோவையில் 50 நாட்களுக்கு பிறகு மீண்டும் பஸ் போக்குவரத்து மற்றும் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. ஆதலால், எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. இத்துடன் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்கவும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கோவை: கோவையில் 50 நாட்களுக்கு பிறகு மீண்டும் பஸ் போக்குவரத்து மற்றும் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. ஆதலால், எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. இத்துடன் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்கவும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கோவையில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பேருந்து சேவை இன்று தொடங்கியுள்ளது. கோவை அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 625 நகரப் பேருந்துகளும், 840 வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் கொரோனா பரவல் மூன்றாவது அலை காரணமாக கடந்த மே மாதம் முதல் பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில், தொற்று பாதிப்பு எண்ணிக்கை கணிசமாகக் குறைந்த சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிகளுடன் பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டது. குறிப்பாக தொற்று அதிகம் பாதித்த கோவை, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்துக்கு தடை தொடர்ந்து வந்தது. தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பேருந்து போக்குவரத்து இன்று தொடங்கியிருக்கிறது.
இதற்காக நேற்றைய தினமே பணிமனைகளில் பேருந்துகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்ட நிலையில் ஒவ்வொரு ட்ரிப் முடித்த பிறகும் இருக்கைகள், கைப்பிடிகள், படிக்கட்டுகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது, பயணிகள் முகக் கவசம் அணிந்து இருப்பதை உறுதி செய்த பின்னரே பேருந்தில் ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பணியின்போது கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்கவும், அரசின் நிலையான வழிகாட்டு நெறிகளை பின்பற்றி 50 சதவிகித பயணிகளை மட்டும் பேருந்தில் அனுமதிக்கவும் போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இருப்பினும், பெரும்பாலான நகர பேருந்துகளில் 100 சதவிகித இருக்கைகள் நிரம்பிய நிலையில் பயணிகள் நின்று கொண்டு பயணிக்கும் சூழல் உள்ளது.
மாவட்டத்தில் கோவை மாநகர், பொள்ளாச்சி, வால்பாறை, அன்னூர், கிணத்துக்கடவு, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் 625 நகரப் பேருந்துகள், 840 வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் என 1425 பேருந்துகள் கோவை அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படுகின்றன. நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு காந்திபுரம் விரைவு பேருந்து நிலையத்தில் இருந்தும், திருப்பூர், ஈரோடு, நாமக்கல் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும், மதுரை, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிமாநில பேருந்து போக்குவரத்துக்கு தடை தொடர்ந்து வரும் நிலையில் கேரள எல்லையான வாளையார் வரையிலும், கர்நாடக எல்லையான ஓசூர் வரையிலும் கோவையிலிருந்து அரசு பேருந்து சேவை வழங்கப்படுகிறது. பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என போக்குவரத்து கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேபோல மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் பேருந்துகளும் இன்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், சிட்டிக்குள் செல்லக்கூடிய பேருந்துகளில் மக்கள் அச்சத்தின் காரணமாக அனேக பேருந்துகள் காலியாக சென்றன. அதேபோல வெளியூர்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகளில் பலர் ஊரடங்கு காரணமாக தங்கிப் போன காரணத்தினால் அவர் அவர்கள் தங்களுடைய ஊர்களுக்கு செல்வதற்காக கோவை காந்திபுரம் சென்றல் பேருந்து நிலையத்தில் முண்டியடித்துக்கொண்டு அரசின் 50 சதவிகித பணிகள் எண்ணிக்கைக்கு மேலாக கூட்டநெரிசலுடன் சென்றனர். கண்டக்டர், டிரைவர் ஆகியோர் முகக் கவசம், சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒருசில கண்டக்டர், டிரைவர்கள் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் முகக் கவசம் அணியாமல் பேருந்தை இயக்கியதைப் பார்க்க முடிந்தது. பயணிகள் பேருந்தில் ஏறும் பொழுது கண்டக்டர் மூலமாக அவர்களுக்கு சானிடைசர் கொடுக்க வேண்டும் என்பது அரசு உத்தரவு உள்ளது. அதை ஊருக்கு செல்லக்கூடிய ஆர்வத்தில் உள்ள மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அதை மக்களுக்கு வழங்க முடியாத நிலையில் கண்டக்டர்கள் இருந்தனர்.
அதேபோல கோவையில் உள்ள முக்கிய வீதிகளான ஒப்பணக்கார வீதி, காந்தி பார்க், டவுன்ஹால் ரோடு, 100 அடி சாலை, உக்கடம் முக்கிய சாலை, ஜிபி சிக்னல், காந்திபுரம் சிக்னல் உட்பட அனைத்துப் பகுதிகளில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. ஆங்காங்கே வெளியூர்களுக்கும் உள்ளோருக்கும் பயணிப்பதற்கு மக்கள் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர். மீண்டும் மக்கள் அதிகமாகக் காணப்பட்டதால், ஓரளவிற்கு கோவை பழைய நிலைக்கு திரும்பி வருகிறது என்பதைப் பார்க்க முடிந்தது.