கோவை: வால்பாறையில் இணையதளம் மூலம் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் பெறப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா பெரும் தொற்று காரணத்தினால் அரசு அலுவலகங்கள் இணையதளங்கள் மூலம் வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக, மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் வருவாய் துறையினர் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் வழங்க மக்கள் நேரடியாக வரவேண்டாம் என்று அறிவுறுத்தல் செய்து, ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் ஜமாபந்தி முகாமுக்கு நடத்தி பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது.
இந்நிலையில், தற்போது மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிற்கிணங்க மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனுக்களை வழங்காமல் பொது மக்கள் வசதிக்கேற்ப ஒவ்வொரு தாலுகா அலுவலகத்தில் இருந்து ஆன்லைன் மூலம் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு வீடியோ பதிவு மூலம் அவர்களுடைய குறைகளைக் கேட்டறிந்து மக்களுக்கு பதில் அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் கோவை மாவட்டத்தில் 11 தாலுகா நிலையங்களில் வட்டாட்சியர் மற்றும் மனுதாரர்கள் ஆன்லைன் மூலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர். தற்போது வால்பாறை பகுதியில் எட்டு மனுக்கள் பெறப்பட்டது.

அதில் வீடுகளுக்கு பட்டா வழங்கவும், வேலை வாய்ப்பு செய்து தரவும், குடியிருப்புக்கு அருகில் விழும் நிலையில் உள்ள மரங்களை வெட்டவும் மனுக்கள் வழங்கப்பட்டது.

இதில் வட்டாட்சியாளர் ராஜன் மற்றும் ஓய்வூதிய வட்டாட்சியர் முத்துக்குமார் ஆகியோர் பங்கு பெற்றனர்.