கோவை: கோவை அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி கிளப் சார்பில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான எக்மோ கருவி மருத்துவமனை முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர், அப்டவுண் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர், கிரீன் சிட்டி ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர், டி . எலைட், ரோட்டரி டிஸ்ட்ரிக்ட் 3201, ரோட்டரி பௌண்டேஷன உடன் இணைத்து ரூபாய் 30 லட்சம் மதிப்பிலான ECMO கருவி அன்பளிப்பாக வழங்கினர்.
இந்த கோவிட் பெருந்தொற்று காலத்தில் ECMO உயிர் காக்கும் கருவியாக உபயோக படுத்தப்படும். இதன் மூலம் மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் நமது கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதன் முதலாக இந்த கருவி நிறுவப்படுகிறது.
கடந்த ஆண்டு கோவிட் முதலாம் அலையின் போது, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மூன்று வெண்டிலேட்டர் அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. ECMO கருவி - செயற்கை முறையில் இரத்த நாளங்களைத் தாண்டி இதயத்தை செயல்பட வைக்கும் செயற்கை உபகரணம். மூச்சுவிட முடியாத நிலையில், மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருந்தால் மூச்சு விடும் செயல்முறையை செயற்கையாக நிகழ்த்தப் பயன்படும் கருவிதான் எக்மோ கருவி Extra corporeal membrane oxygenator என்பதன் சுருக்கமே ECMO எனப்படுகிறது. இது மனித உயிரைக் காக்கும் நோக்கில் நவீன கருவியின் மூலம் அளிக்கப்படும் அதி உயர் சிகிச்சையாகும்.
கொரோனா சிகிச்சையில் எக்மோ கருவி சிறப்பாக உதவுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த உயர்தர சிகிச்சையானது சாதாரண பொது மக்களுக்கு மிக அதிக அளவில் பயன்பட வேண்டும் என்றும் அதுவும் இலவசமாக மக்களுக்கு பயன்பட வேண்டும் என்றும் இந்த கருவி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.