வழிபாட்டுத் தலங்களுக்கு தளர்வு: கோவை ஈச்சனாரி விநாயகர் திருக்கோவிலில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பக்தர்கள் சாமி தரிசனம்..!

கோவை: வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டதால் ஈச்சனாரி விநாயகர் திருக்கோவிலில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


கோவை: வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டதால் ஈச்சனாரி விநாயகர் திருக்கோவிலில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் வழிபாட்டுத்தலங்கள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்தது. இருப்பினும் வழிபாட்டுத் தலங்களுக்கு வெளியில் நின்று மக்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில், இன்று முதல் வழிபாட்டுத் தலங்களுக்கு உள்ளே சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.



இதையடுத்து, கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள ஈச்சனாரி விநாயகர் திருக்கோவிலில் இன்று முதல் பக்தர்கள் சாமி தரிசனம் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதனால் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.



கோவிலுக்கு வரும் பக்தர்கள் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள்.



நீண்ட நாட்களுக்குப் பிறகு கோவில்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஈச்சனாரி விநாயகர் திருக்கோவிலுக்கு குறைவான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...