திருப்பூரில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் 50 சதவீத பேருந்துகள் இயக்கம்!

திருப்பூர்: திருப்பூரில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூரில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் பேருந்து சேவை துவங்கி உள்ளது. கொரோனா இரண்டாவது அலை தீவிரம் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், தமிழக அரசு 50 சதவீத பயணிகளுடன் பேருந்தை இயக்கலாம் என அறிவித்தது.

இதனையடுத்து, இன்று திருப்பூர் மாவட்டத்திற்கு உள் பயணிக்க 166 பேருந்துகளும் திருப்பூரில் இருந்து பிற மாவட்டங்களுக்கு பயணிக்க 167 பேருந்துகளும் என 333 பேருந்துகள் இயக்கப்படுகிறது. முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே பேருந்தில் பயணிக்க அனுமதிக்கிறது.



திருப்பூர் நகர பேருந்துகளில் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது என்றாலும் பிற மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளான சேலம், திண்டுக்கல், மதுரை செல்லும் பேருந்துகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே, பிற மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை அதிகரித்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...