கோவை சிறுமுகை பகுதியில் அவுட்டு காய் தயாரித்த 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு!

கோவை: கோவை சிறுமுகை பகுதியில் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது, அவுட்டு காய் தயாரித்த 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


கோவை: கோவை சிறுமுகை பகுதியில் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது, அவுட்டு காய் தயாரித்த 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சிறுமுகை சரக வனத்துறை அதிகாரிகள் இன்று காலை தேன் கல்கருட அருகே வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, செல்வன் என்பவரின் தோட்டத்தில் சந்தேகப்படும் வகையில் மூன்று நபர்கள் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது, வனத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரிக்கும் பொழுது, மூன்று நபர்களிடம் 17 அவுட்டு காய் இருந்துள்ளது. விசாரணையில் மேற்படி அவுட்டுக்காயை காட்டுப் பன்றிகளை வேட்டையாடுவதற்காக வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

பின்னர், இது தொடர்பாக கோவை மாவட்டம், சிறுமுகை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அதில் தொடர்புடைய 1. மார்ட்டின், 2. செல்வம் @செல்வராஜ், 3. சிலுவை முத்து ஆகியோரை செய்து சிறையில் அடைத்தனர்.

மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அரடவர்கள் எச்சரித்துள்ளார்.

இது சம்பந்தமாகப் பொதுமக்களுக்கு தகவல் தெரிந்தால் 9498181212 என்ற தொலைபேசி எண்ணிற்கும், 7708100100 என்றால் வாட்ஸ்அப் எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் இரகசியங்கள் காக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...