வால்பாறையில் 54 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு அரசு பேருந்துகள் மீண்டும் இயக்கம் - பொதுமக்கள் மகிழ்ச்சி!

கோவை: வால்பாறையில் 54 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு அரசு பேருந்துகள் மீண்டும் இயங்க தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: வால்பாறையில் 54 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு அரசு பேருந்துகள் மீண்டும் இயங்க தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் கடந்த 10.05.21 முதல் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது கொரானா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்ததன் காரணமாக அரசு பேருந்துகளை இயக்க அரசு அறிவித்ததைத் தொடர்ந்து இன்று காலை முதல் அரசு பேருந்துகள் இயங்க தொடங்கியுள்ளன.



இந்நிலையில், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி, பழனி மற்றும் திருப்பூருக்கு 10 பேருந்துகளும் தேயிலைத் தோட்டப் பகுதிகளான முடீஸ், சோலையார் அணை, ஷேக்கல்முடி கருமலை, சக்தி எஸ்டேட. ரட் ஆகிய பகுதிகளுக்கு 14 பேருந்துகளும் என 24 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வால்பாறை அரசுப் போக்குவரத்துக் கழக கிளையிலிருந்து 24 பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. 54 நாட்கள் இடைவெளிக்குப்பின் பேருந்துகள் இயக்கப்படுவது மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...