கோவை: வால்பாறை அரசு மருத்துவமனையைச்சுற்றி காட்டுப்பன்றிகள் முகாமிட்டதைப் போன்று, மருத்துவமனையின் பின் பகுதியிலிருந்து முன் பகுதிக்கு வந்து மருத்துவமனையின் பிரதான சாலை வழியாக காவல்துறை மைதானத்திற்கு செல்கிறது இப்படி அடிக்கடி காட்டுப்பன்றிகள் பிரதான சாலையில் செல்வதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையின் மத்தியில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. மருத்துவமனையைச் சுற்றி தபால் நிலையம் காவல் நிலையம் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் முகாமிட்டதைப் போன்று பகல் நேரங்களில் உலா வருகின்றன.

இந்த காட்டுப்பன்றிகள் அரசு மருத்துவமனையின் பின் பகுதியிலிருந்து முன் பகுதிக்கு வந்து மருத்துவமனையின் பிரதான சாலை வழியாக காவல்துறை மைதானத்திற்கு செல்கிறது. இப்படி அடிக்கடி காட்டுப்பன்றிகள் பிரதான சாலையில் செல்வதால், மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களும் சாலையில் செல்லும் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.
மேலும், வால்பாறை பகுதியில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதால் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனை மற்றும் நகருக்குள் வரும் காட்டுப்பன்றிகளை வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.