கோவையில் விமானத்தில் பார்சல் மூலம் துப்பாக்கி அனுப்பியதாக சேலம் டாக்டர் மீது போலீஸார் வழக்கு பதிவு..!

கோவை: கோவையில் பார்சல் மூலம் விமானத்தில் துப்பாக்கி அனுப்பியதாக சேலத்தைச் சேர்ந்த டாக்டர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


கோவை: கோவையில் பார்சல் மூலம் விமானத்தில் துப்பாக்கி அனுப்பியதாக சேலத்தைச் சேர்ந்த டாக்டர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சேலத்தைச் சேர்ந்த சாமுவேல் ஸ்டீபன் என்ற டாக்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து ஏர் பிஸ்டல் துப்பாக்கியை ஆன்லைன் மூலம் வாங்கியிருந்தார். வாங்கிய ஏர் பிஸ்டல் துப்பாக்கியில் பழுது இருந்ததால் அதனை மீண்டும் கொரியர் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு டாக்டர் சாமுவேல் ஸ்டீபன் திருப்பி அனுப்பி வைத்தார். அந்த கொரியர் நிறுவனம் துப்பாக்கி பார்சல் குறித்த எந்த விவரங்களையும் விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் விமானம் மூலம் அனுப்புவதற்காக விமான நிலையம் கொண்டு சென்றனர். பார்சல்களை சோதித்த விமான நிலைய அதிகாரிகள் துப்பாக்கி ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து சம்பந்தப்பட்ட கொரியர் நிறுவனத்தை அழைத்து விசாரணை நடத்தினர்.

மேலும் இதுகுறித்து, டாக்டர் சாமுவேல் ஸ்டீபனையும் நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து முறையான தகவல் தெரிவிக்காமல் துப்பாக்கியை கொரியர் மூலம் விமானத்தில் அனுப்பி வைக்க முயன்றதாக டாக்டர் சாமுவேல் ஸ்டீபன் மீது விமான நிலைய தலைமை பாதுகாப்பு அதிகாரி முருகன் பீளமேடு போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் டாக்டர் சாமுவேல் ஸ்டீபன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...