வால்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்..!

கோவை: வால்பாறையில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு அருகில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளிகளுக்கு உணவு வழங்கவில்லை என்று நோயாளிகளின் உறவினர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: வால்பாறையில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு அருகில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளிகளுக்கு உணவு வழங்கவில்லை என்று நோயாளிகளின் உறவினர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு கலைக் கல்லூரியை கொரோனா சிகிச்சை மையமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அங்கு ஆரம்பகட்டத்தில் 30 பேர்களுக்கும் மேல் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது கொரோனா பெருந்தொற்று குறைந்து காணப்படும் நிலையில், அரசு கல்லூரியில் பத்துக்கும் குறைவான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



கொரோனா சிகிச்சை மையத்தில் ஆக்சிஜன் வசதி இல்லாததால், நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால், அவர்களை பொள்ளாச்சி மற்றும் கோவையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லுவது வழக்கம். ஆனால், தற்போது வால்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அருகில் உள்ள வார்டு ஆக்சிஜன் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கும் நோயாளிகளை அனுமதித்து கொரோனாவிற்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு இங்கு கொரோனா நோயாளிகள் உள்ளார்கள் என்று தெரியாத நிலையில், மருத்துவமனை முன்பு முன்னெச்சரிக்கை அறிவிப்பு இல்லாமல் இருப்பதால் நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். தீவிர சிகிச்சை பிரிவுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வந்து செல்கின்றனர்.



கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு களுக்கும் சென்று சிகிச்சை பார்த்து வருவதால், கொரோனா பெருந்தொற்று, மருத்துவமனைக்கு வந்து செல்பவர்களுக்கு பரவும் என்றும் தற்போது அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு கடந்த நான்கு நாள்களாக ஒருவேளை உணவு மட்டும் வழங்கிவருகிறார்கள் என்றும் மற்ற வேலைகளில் உணவு வழங்காத நிலை ஏற்பட்டு வருவதாகவும் நோயாளியின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தகவலறிந்து வந்த காவல்துறை ஆய்வாளர் மகேஸ்வரி அவர்களிடம் சமாதானம் பேசி போராட்டத்தை கைவிட செய்தார். மேலும், தீவிர சிகிச்சை பிரிவு அருகில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்ய வேண்டும் என்றும் கொரோனா சிகிச்சை அளிக்கும் வார்டு மாற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...