திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 9 கோடி ரூபாய் செலவில் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் சாமிநாதன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். முதற்கட்டமாக திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட உள்ள விளையாட்டுத் திடலை ஆய்வு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து முருகம்பாளையம் பகுதியில் உள்ள கழிவுநீர் பொது சுத்திகரிப்பு ஆலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஆய்வுக் கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காலநிலை மாற்றம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், 'தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி அனைத்து அமைச்சர்களும் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வுப் பணிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் குறித்த ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். திருப்பூர் தொழில் நகரமாகும் இங்கு அதிகப்படியான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. சாய ஆலைகள் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு சாய ஆலைகளை மூட வேண்டும் என கோரிக்கை எழுந்தபோது முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் முயற்சியால் தமிழக அரசு சார்பில் 200 கோடி ரூபாயும் மத்திய அரசு சார்பில் 100 கோடி ரூபாயும் திருப்பூருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு சாய ஆலைகள் காப்பாற்றப்பட்டது.

தற்போது திருப்பூர் மாநகரில் பெரும் பிரச்சினையாக இருக்கும் நொய்யல் ஆறு, பரம்பிக்குளம் ஆகியவற்றை புனரமைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதுமட்டுமின்றி தொழில் அதிபர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு அதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.

திருப்பூர் மாவட்டத்திற்கென உலகத் தரம் வாய்ந்த அளவில் 11.2 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 9 கோடி மதிப்பீட்டில் சிந்தடிக் தளம் அமைக்கப்பட உள்ளது. தொடர்ந்து ஹாக்கி, வாலிபால், புட்பால் என அனைத்து விளையாட்டுக்கென பிரத்யேகமான மைதானங்கள் உருவாக்கப்படவுள்ளது. விரைவில் அதற்கான தொடக்கவிழாவினை முதல்வர் தொடங்கி வைப்பார். அடுத்து வரும் 45 நாட்களுக்குள் விளையாட்டு மைதானம் அமைக்கத் தேவையான பணிகள் நடைபெறும். சாயக் கழிவுகள் இனி ஆறுகளில் கலக்காத வண்ணம் புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்' என தெரிவித்தார்.