கோவை அரசு கலைக்கல்லூரி கொரோனா சிகிச்சை மையம் தொடர்ந்து செயல்படும்... டீன் நிர்மலா தகவல்..!

கோவை: கோவை அரசு கல்லூரியில் உள்ள சிகிச்சை மையம் தொடர்ந்து செயல்படும் இதனை மூட வாய்ப்பில்லை. கல்லூரிகள் திறந்தாலும் கல்லூரி வளாகத்தில் சிகிச்சை மையம் தொடர்ந்து செயல்படும் என்று டீன் நிர்மலா தகவல் தெரிவித்தார்.


கோவை: கோவை அரசு கல்லூரியில் உள்ள சிகிச்சை மையம் தொடர்ந்து செயல்படும் இதனை மூட வாய்ப்பில்லை. கல்லூரிகள் திறந்தாலும் கல்லூரி வளாகத்தில் சிகிச்சை மையம் தொடர்ந்து செயல்படும் என்று டீன் நிர்மலா தகவல் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் கடந்த மே மாதம் கொரோனா பாதிப்பு அதிகரித்திருந்தது. தொற்று ஏற்பட்ட 70% பேருக்கு ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. இதனால் மாவட்டத்தில் ஆக்ஸிஜன் படுக்கைக்கு தட்டுப்பாடு நிலவியது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவை அரசு கலைக் கல்லூரி ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையம் கடந்த மே மாதம் ஏற்படுத்தப்பட்டது.

இதனை, திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ திறந்து வைத்தார். இந்த சிகிச்சை மையத்தில் ஆக்ஸிஜன் அளவு 88 முதல் 90 சதவிகிதம் இருக்கும் நபர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சுழற்சிமுறையில் டாக்டர்கள் நர்சுகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இப்பொழுது படிப்படியாக கொரோனா குறைந்து வருவதால் மூன்றாம் அலைக்கு வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருப்பதால், அதற்கான ஆயத்த பணியில் சுகாதாரத்துறை ஈடுபட்டு வருகிறது.

இதுகுறித்து கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறும்போது, ‘‘அரசு கல்லூரியில் உள்ள சிகிச்சை மையம் தொடர்ந்து செயல்படும் இதனை மூட வாய்ப்பில்லை. கல்லூரிகள் திறந்தாலும் கல்லூரி வளாகத்தில் சிகிச்சை மையம் செயல்படும். அதற்கு ஏற்றார்போல மாற்றங்கள் செய்யப்படும். சிகிச்சை மையத்தை உடனடியாக அங்கிருந்து மாற்றிய பின் மீண்டும் பரவல் அதிகரித்தால் திரும்பவும் சிகிச்சை மையத்தை ஏற்படுத்துவதற்கு காலதாமதம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். எனவே, பொதுமக்கள் நலன் கருதி அரசு கலைக் கல்லூரியில் உள்ள மையம் தொடர்ந்து செயல்படும்'' என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...