குன்னூரில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்..!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் முதன் முறையாக குன்னூரில் தனியார் தன்னார்வ அமைப்பு சார்பாக ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆகியோர் இன்று(சனிக்கிழமை) தொடங்கி வைத்தனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் முதன் முறையாக குன்னூரில் தனியார் தன்னார்வ அமைப்பு சார்பாக ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆகியோர் இன்று(சனிக்கிழமை) தொடங்கி வைத்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்கு 23, 108ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் மாவட்டத்திற்குள் பல்வேறு பகுதிகளில் கொரோனா பெருந்தொற்று மற்றும் சாலை விபத்துகள் ஏற்பட்டால் பாதிக்கப்படும் நபர்களை மருத்துவமனைக்கு அழைத்து வருவதில் 108 ஆம்புலன்ஸ் பெரும் பங்கு வகிக்கிறது.



தற்போது ஆம்புலன்ஸின் தேவை அதிகரித்துள்ளதால், தனியார் அமைப்புகளை ஒன்றிணைத்து பல்வேறு நிறுவனங்களின் பங்களிப்புடன் ராதிகா சாஸ்திரி என்னும் தன்னார்வலர் ஆக்ஸிஜன் உட்பட பல்வேறு வசதிகளுடன் கூடிய ஆட்டோ வடிவிலான 6 மினி ஆம்புலன்ஸ்களை வழங்கினர். இந்த சேவையை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைத்தனர்.



இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கா.ராமச்சந்திரன் வட மாநில தொழிலாளர்கள் சுமார் 500 பேருக்கு தனியார் பள்ளி வளாகத்தில் அரிசி மற்றும் பருப்பு, சமையல் எண்ணெய் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். இதனைத் தொடர்ந்து குன்னூர் ஒட்டுப்பட்டரை பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு அரிசி தொகுப்பை வழங்கினார்.

குறுகலான சாலையில் நோயாளிகளை அழைத்துவர இந்த ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இந்தத் திட்டம் பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...