கோத்தகிரியில் போக்கு காட்டிய கரடி பிடிபட்டது..!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன் கிராமத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி போக்கு காட்டி வந்த கரடி, வனத்துறையினரிடம் இன்று(சனிக் கிழமை) பிடிபட்டது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன் கிராமத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி போக்கு காட்டி வந்த கரடி, வனத்துறையினரிடம் இன்று(சனிக் கிழமை) பிடிபட்டது.

கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன், கேர்கம்பை, இந்திரா நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு மற்றும் தேயிலைத் தோட்டங்களில் கரடி உலா வந்து பொது மக்களை அச்சுறுத்தி போக்கு காட்டி வந்தது. இந்தநிலையில், கரடியைப் பிடிக்க ஒருமாத காலமாக மிளிதேன் பகுதியில் இரும்புக் கூண்டில் பழங்கள் முதலான உணவுப் பொருட்கள் வைத்து வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.



இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை கரடி கூண்டிற்குள் சிக்கியது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா தலைமையிலான வனத்துறையினர், அதிவிரைவு வன காவலர்கள் கரடியை ஆய்வு செய்தனர். கூண்டிற்குள் சிக்கிய கரடி கூண்டை சேதப்படுத்தி தப்பிக்க முயற்சித்ததால் விரல்களில் காயம் ஏற்பட்டிருந்தது.



பின்பு வனத்துறையினர் கரடியை லாரியின் மூலம் ஏற்றிச் சென்று, கோரக்குந்தா அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். பிடிபட்டது பெண்கரடி என்றும் அதன் குட்டி கரடி இப்பகுதியில் சுற்றிவருவதால், அதனையும் பிடிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...