கோவை: கோவையில் தடுப்பூசி செலுத்தும் இடத்தில் பிரதமர் மோடியின் ஃபிளக்ஸ் பேனரை அகற்றும் காவல் துறையை கண்டித்து காவல் ஆணையர் மற்றும் கலெக்டரிடம் பாஜக சார்பாக மனு அளிக்கப்பட்டது.

கோவையில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் நந்தகுமார் தலைமையில் கோவை வழக்கறிஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் மற்றும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் ஆகியோரிடம் மனு ஒன்றை கொடுத்தனர். பிறகு செய்தியாளர்களை சந்தித்த நந்தகுமார், ‘‘பிரதமர் மோடி, இந்தியா முழுவதிலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடுவதற்கு உத்தரவிட்டுள்ளார். அதற்காக எந்தப் பாகுபாடுமின்றி அனைத்து மாவட்டங்களுக்கும் தடுப்பூசிகள் முறையாகப் பிரித்து அனுப்பப்படுகிறது.
இந்தநிலையில், கோவையில் தடுப்பூசி போடப்படும் இடங்களில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக வைக்கப்பட்டுள்ள நரேந்திர மோடியின் ஃபிளக்ஸ் பேனர்களை காவல் துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர். ஆனால், திமுகவின் பேனர்களை அவர்கள் அப்புறப்படுத்தவில்லை. இது ஒருதலைப்பட்ச செயலாக இருக்கிறது. உடனடியாக மாநில அரசு தலையிட்டு அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். எந்தக் கட்சியினரும் தடுப்பு ஊசி போடக் கூடிய இடத்தில் தங்களுடைய ஃபிளக்ஸ் பேனர்களை வைக்கக் கூடாது என அறிவிக்க வேண்டும். எங்களுடைய ஃபிளக்ஸ் பேனர்களை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்துள்ளோம். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் விரைவில் போராட்டத்தில் இறங்குவோம்'' எனக் கூறினார். அப்போது, நூற்றுக்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா வழக்கறிஞர்கள் அணி சார்பாக பலர் உடனிருந்தனர்.