கோவை: கோவையில் மளிகை கடை வியாபாரி லாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (40), இவர் கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் மளிகை கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று நல்லாம் பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அவினாசி சாலை அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் சக்திவேல் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இதுகுறித்து கோவை போக்குவரத்து கிழக்கு புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.