கோவை: வால்பாறையில் படிக்கட்டு போல் கட்டப்பட்டுள்ள புதிய பாலங்களை விபத்து ஏற்படும் முன்பு சரி செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கன மழை காலங்களில் மழை நீர் சாலைகளில் தேங்கி உள்ளதால் வாகனங்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அவ்வப்போது, தார் சாலை வழி தெரியாமல் விபத்து ஏற்பட்டு வருகின்றன.
இதனிடையே, வால்பாறை அருகே ரொட்டிக்கடை பகுதியிலிருந்து சோலையார் அணை செல்லும் வழியில் 6 பாலங்கள் கட்டப்பட்டு உள்ளது.

இதில் தண்ணீர் சாலைகளில் நிற்காமல் இருப்பதற்காக சாலையின் குறுக்கே ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையை தோண்டி பெரிய குழாய் அமைத்து தண்ணீரை சாலையின் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு செல்வதற்காக அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது பணி நிறைவடைந்து பல நாட்கள் ஆகியும் 6 பாலங்களில் படிக்கட்டு போன்று காணப்படுவதாலும், முன்னெச்சரிக்கை பலகை இல்லாமலும் இரவு நேரங்களில் வருபவர்களுக்கு ரிஃப்ளெஸ் லைட் மூலம் சாலை பழுது அடைந்துள்ளது என்று தெரியப்படுத்தாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக ஒப்பந்ததாரர் பார்த்திபன் என்பவர் இந்த பணியை செய்து வருகிறார்.

இந்த நிலையில், விபத்து ஏற்படுவதற்கு முன் இந்த பாலப் பணிகளை நிறைவு செய்யவும், மக்களுக்கு முன்னெச்சரிக்கை பதாகைகள் வைத்தும், வேகத்தடைகள் மற்றும் முன்னெச்சரிக்கை விளக்குகளை பொருத்தி பணியை செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.