கோவை: கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட முகாமில் காத்திருக்கும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என எம்.எல்.ஏ செ.தாமோதரன் மருத்துவர்களிடம் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மதுக்கரை மற்றும் செட்டிபாளையம் பேரூராட்சி பகுதியில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், மதுக்கரை பேரூராட்சி பகுதியில் குரும்பபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாமை கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முகாமிற்கு வருகை தந்த எம்.எல்.ஏவிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன்படி, முகாம்களில் நீண்ட நேரமாகக் காத்திருக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று மருத்துவர்களிடம் எம்.எல்.ஏ செ.தாமோதரன் வலியுறுத்தினார்.
இந்த முகாமில் மதுக்கரை அதிமுக பேரூராட்சி கழக செயலாளர் சண்முகராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.