கோவை: கோவையில் முன்விரோதம் காரணமாக வாலிபர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை அடுத்த சின்னவேடம்பட்டி ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் சிபி (18). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது.
இந்நிலையில் சிபி தனது நண்பர் சாமுவேலின் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சிலர் சிபியிடம் தகராறு செய்து சரமாரியாக தாக்கினர்.
இதைப்பார்த்த, சிபியி நண்பர்கள் சாமுவேல், நவீன் ஆகியோர் அவர்களை பிடித்து பதிலுக்கு தாக்கினர். இது தொடர்பாக இரு தரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணம்பட்டி எல்.ஜி.பி நகரைச் சேர்ந்த பால் ஜார்வின் (19), அம்மன் நகரைச் சேர்ந்த கதிர் (18), சிவானந்த புரத்தைச் சேர்ந்த லிதினோ (16) ஆகிய 3 பேரையும் மற்றொரு தரப்பில் (சிபி 18), சுப்பிரமணியம் நகரைச் சேர்ந்த சாமுவேல் (18) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.