வால்பாறையில் நகராட்சி பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்!

கோவை: வால்பாறையில் நகராட்சி பணியாளர்களுக்கு நான்காம் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.


கோவை: வால்பாறையில் நகராட்சி பணியாளர்களுக்கு நான்காம் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் பணியாற்றும் 135 பணியாளர்களில் 3 கட்டமாக 100 பேர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று நான்காம் கட்டமாக மீதமுள்ள 35 பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. வால்பாறை நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற முகாமில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

முன்னதாக, பயனாளிகளின் ஆதார் கார்டு சரிபார்ப்பு பின்னர் விண்ணப்பம் நிரப்பப்பட்டது. தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்டது.



இந்த முகாமில் வால்பாறை நகராட்சி ஆணையாளர் சுரேஷ் முன்னிலையில் வால்பாறை நகராட்சியைச் சேர்ந்த அலுவலக பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அம்மா உணவக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் மற்றும் செவிலியர்கள் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...