கோவை: வால்பாறை அரசு மருத்துவமனை பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் கொரோனா பெரும் தொற்று அதிகரித்து வந்த நிலையில், தமிழக அரசு முழு ஊரடங்கு விதித்தும் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்து தனிநபர் இடைவெளி கடைபிடிக்க வேண்டும், முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும், பொது இடங்களில் மக்கள் கூடக் கூடாது போன்ற நடவடிக்கைகளை வலியுறுத்தி வந்தது.
கோவை, அனைவருக்கும் கட்டாய தடுப்பூசி அளிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வந்த நிலையில், நகராட்சி நிர்வாகங்கள் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் இடங்களை கிருமி நாசினி கொண்டு மருந்து தெளித்து கொரோனா தொற்று பரவாமல் தடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், வால்பாறை பகுதியில் நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார் அறிவுறுத்தலின்படி, வால்பாறை அரசு மருத்துவமனை சுகாதார நிலையம் மருத்துவமனை ஆகியவற்றில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.
வாகனத்தின் மூலம் மருத்துவமனையில் புறநோயாளிகள் வரும் இடங்கள், உள்நோயாளிகள் அறை, மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ வாகனங்கள் போன்றவைகளுக்கும் மருந்து தெளிக்கப்பட்டது.